75 ஆண்டுகளாக எழுந்திரிக்க முடியாமல் சீன ஆதிக்கத்தில் உழலும் தீபெத்தியர்களின் துயரங்கள் சொல்லில் அடங்காதவை; சீன கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவத்தை கொண்ட திபெத்திய கலாச்சாரம், மொழி, பண்பாடு போன்றவை தற்போது எப்படி அணுவணுவாக அழிக்கப்பட்டு வருகிறது எனப் பார்க்கலாம்; 1950 ஆம் ஆண்டு சீன படையெடுப்பிற்கு முன்பு, திபெத் புத்த மதத்தில் புதைந்திருந்த ஒரு நாடாக இருந்தது. மத நடைமுறை திபெத்திய மக்களின் அன்றாட வாழ்க்கையின் அம்சமாகி, அவர்களின் அமைதியான சமூகக் கட்டமைப்பை உருவாக்கியதோடு, அவர்களை பேராசைகள் அற்றவர்களாகவும் – இருப்பதில் திருப்தி ...













