தங்களுக்கு ஒரு சதவிகித வாக்கு இருப்பதைக் கூட உறுதிபடுத்த இயலாத உதிரி கட்சிகள் தாங்கள் ஏதோ தமிழக அரசியலையே புரட்டி போட்டு விடக் கூடிய சக்தி போல தோற்றம் காட்டி, எந்தக் கூட்டணியில் சேருவது என்பதில் தெளிவில்லாமல், திமுகவிலும் ஒரு துண்டை போட்டு வைப்போமே… என்று ஸ்டாலினை பார்த்து வருகிறார்கள்! எச்சரிக்கை; அதிமுக கலகலத்துக் கிடக்கிறது. பாஜக அதை சிறுகச் சிறுக தின்று செரித்துக் கொண்டுள்ளது. திமுக கூட்டணியை பொறுத்த வரை அது வலுவாக உள்ளது. இன்னும் ஏதாவது புதிய கட்சி வந்து தான் ...