”திமுகவை ஒழித்துக் கட்டுவதே எங்கள் இலக்கு” என்று பாஜக சொல்கிறது! ”பாஜகவை ஒழித்துக் கட்டி தமிழகத்தை காப்பாற்றுவதே எங்கள் லட்சியம்” என்கிறது திமுக! உண்மையில் இந்த இருவரும் ஒருவரை ஒருவர் வாழ வைத்துக் கொள்ளவே இவ்விதம் பேசிக் கொண்டு இருக்கின்றனர். இந்தக் கருத்து பலருக்கு முட்டாள் தனமாகத் தெரியும். ஆனால், இதுவே யதார்த்தம். ஒருவரை பற்றி அடிக்கடி பேசுவதன் மூலம் நீங்கள் அவருக்கு மிக முக்கியத்துவம் தருகிறீர்கள்..! அவரை மக்கள் மறந்துவிடாதபடிக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறீர்கள். அவர்களை எதிர்ப்பதால் தான் உங்கள் இருப்பு அர்த்தமாகிறது ...