திராவிட மாடலைப் புரிந்துகொள்வோம் -5 திராவிட மாடல் என்பது என்ன..? அற நிலையத் துறைக்கு தரும் அதிக முக்கியத்துவமா? வாக்கு வங்கியை மையப்படுத்திய திட்டங்களா? மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களையே தமிழில் மாற்றி புகுத்தும் ராஜதந்திரமா.? டாஸ்மாக் கலாச்சாரமா.? என்ன தான் திராவிட மாடல் என பார்த்து விடுவோமா? ‘திராவிட மாடல்’ எனும் பெயரில் தங்களுக்கென ஓர் ஆட்சி மாதிரியை, சித்தாந்தத் திசைகாட்டியை வைத்திருப்பதற்கும், அதை அன்றாடச் செயல்பாடுகளோடு பொருத்திப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் முதல்வர் ஸ்டாலினை நிச்சயமாகப் பாராட்டலாம். ஆனால், அந்த ...
திராவிட மாடலைப் புரிந்துகொள்வோம் – 4 சாதாரண மக்களை முன்னிறுத்தி சிந்தித்து செயல்பட்ட கேரளா மாடல்!கார்ப்பரேட்டுகளை வாழ வைக்க, சராசரி மக்களை சக்கையாக பிழிந்த குஜராத் மாடல்! கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை அனைவருக்குமாக்கிய கியூபா மாடல்..போன்றவற்றை பார்க்கையில் திராவிட மாடல் எந்த ரகம் எனப் பார்ப்போமா..? ‘மாடல்’ என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் ஆடம்பரப் பொருட்களை விற்பதற்கென முன்னிறுத்தப்படும் அழகுப் பதுமைகளை, கட்டுமஸ்தான இளைஞர்களை மாடல் என்றழைக்கிறோம். ஓர் ஓவியருக்கு அல்லது புகைப்பட நிபுணருக்கு மாதிரியாக இயங்குபவரும் ...
திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் -3 ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை ஸ்டாலின் என்னென்ன பேசினார்..! அந்தப் பேச்சுக்களை தற்போது மீளவும் பார்க்கையில் உண்மையிலேயே சிலிர்க்கிறது..! ‘நம்மை ஆட்சி செய்வது ஒரு தேவ தூதனோ.! இவர் நம்மை பொற்காலத்திற்கு கொண்டு செல்ல உள்ளாரோ’ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது; சில உதாரணங்கள்; கடந்த 2021-ஆம் ஆண்டு யூலை 9 அன்று தமிழக பொருளாதார வளர்ச்சிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் நாட்டில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி ...