திருச்சி சூர்யா சிவாவின் பேச்சு கொலைவெறிக் கோபாவேசம், அநாகரீகத்தின் உச்சம்! காட்டுமிராண்டித்தனம்!..எனத் தெளிவாக தெரிய வந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலையால் இயலவில்லை! சசிகலா புஷ்பா பாதிக்கப்பட்டதற்கும் நடவடிக்கை இல்லை. காரணம் என்ன? பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்சி சரணிடம் போனில் பேசும் சூர்யாவிடம் தன் கோபம் இன்னதற்கானது தான் சொல்லும் நிதானம் கூட இல்லை. ‘எதிர்முனையில் பேசுபவர் பெண் என்பதால் என்ன செய்துவிட முடியும்’ என்று நினைத்திருக்கிறார் போலும்! ”நீ படுத்து தானே பதவி வாங்கினே..?” ”உன்னை  நடுரோட்டில் ...