தமிழக மண்ணில் எது நடக்கக் கூடாது எனத் தவித்தோமோ, அது நீதிமன்றத் தீர்ப்பு வழியாக அரங்கேறத் துடிக்கிறது. அமைதி பூங்காவாகத் திகழும் தமிழ் நாட்டை அல்லோகல பூமியாக்க நீதித் துறையை பயன்படுத்தும் நீசப் போக்கை – அறம் தவறி, அத்துமீறி வழங்கப்படும் நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்புகளை அலசுகிறார், ஹரிபரந்தாமன்; மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கி, அறுபடை வீடுகளில் முதல் வீடான திருபரங்குன்றத்தை கலவரத் தீ பிடிக்கும் குன்றமாக்க முயற்சித்துள்ளார். வழக்கமாக ஒவ்வொரு வருடமும் மதுரையில் உள்ள ...

திருப்பரங்குன்றம் மலை தற்போது ‘திகு திகு’ அரசியலாக மாற்றப்பட்டு வருகிறது! அறுபடை கோவில்களில் முதல் படையான இந்த முருகன் கோவிலை வைத்து இந்து மத உணர்வாளர்கள் படை திரட்டி வருகிறார்கள்! ”புனித மலை மீது புலால் உணவா..?” என்றும், ”இது புதில்லையே பல்லாண்டு பழக்கம் தானே” என்றும் வாதங்கள்..! தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலை நகரான மதுரை கலவரச் சூழலில் உள்ளது. இது வரை இல்லாத வகையில் மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு என்றும், நாளையுமாக ( பிப்ரவரி -3,4) ...