தலித்துகளின் பாதுகாப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி தற்போது தலித்துகளை தாக்குவோருக்கான பாதுகாப்பு இயக்கமா..? தலித்துகள் பாதிக்கப்பட்ட இத்தனை சம்பவங்களில் எத்தனைக்கு வாய் திறந்தீர்கள்? எத்தனைக்கு போராடினீர்கள்..? இதோ இந்தப் பட்டியலுக்கு பதில் சொல்வீர்களா திருமா? பார்ப்போமா..? தலித்துகளுக்கு எதிராக திமுக அரசில் எத்தனையெத்தனை வன்முறைகள் அரங்கேறினாலும் பெரும்பாலானவற்றில் அமைதி காப்பது, ஒருசிலவற்றில் முணுமுணுப்பது, குறிப்பிட்டவற்றுக்கு மட்டும் அறிக்கை தருவது, வெகுசிலவற்றுக்கு மட்டும் பேருக்கு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு ‘’எஜமானே கோவிச்சுக்காதீங்க,, இது கூட உங்களுக்கு எதிராக இல்லை. என்னோடு இருக்கிறவங்க என்னை கைவிட்டு போய்விடக் ...