சுமார் 35 படங்களுக்கு மட்டுமே இசை அமைத்துள்ளார் என்றாலும், திரை இசையில் டி.ராஜேந்தரின் பங்களிப்பு என்பது முக்கியமானது. சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்தில், அவருக்கு இணையாக டி.ராஜேந்தர் ஒரு கோடி சம்பளம் பெற்றது அவரது இசை மற்றும் பாடல்களின் சந்தை முக்கியத்துத்தை உணர்த்துகிறது. டி.ஆர் பாடல்கள் ஒரு அலசல்; தமிழில் டி.ராஜேந்திரருக்கு இருக்கும் பேரார்வம், காட்டாற்று வெள்ளம் போன்ற உணர்ச்சி வெளிப்பாடு.. ஆகியவை அவரே மெட்டமைத்து, ‘பாட்டு கட்டும்’ திறமையைத் தந்துள்ளது எனலாம். இளையராஜா என்ற பிரம்மாண்டத்தோடு ...


















