பள்ளிகளில் நடத்தப்பட்ட கள ஆய்வுகள் பல இன்னுமா தீண்டாமை? இப்படியுமா நடக்கின்றன..? என நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன! இவற்றின் பின்னணி என்ன? இதை தடுப்பது எப்படி? அரசிடம் அளிக்கப்பட்ட அறிக்கைப்படி நடவடிக்கை இல்லை எனில், பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவோம்; தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவிப்பு. 250  தன்னார்வ கள ஆய்வாளர்களுக்கு  பயிற்சி கொடுத்து தமிழகம் முழுவதும்  கள ஆய்வு செய்ய அனுப்பினோம். அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக இந்த ஆய்வை மேற்கொண்டு முடித்தனர்.   36 மாவட்டங்களில், 441 பள்ளிகளில் ஆய்வுகள் செய்துள்ளனர். 644 மாணவர்களைசந்தித்து விரிவாக ...