தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வில் அருணா ஜெகதீசன் அறிக்கையை கிடப்பில் போட்டு, கொலைகார குற்றவாளிகளை 19 மாதங்களாக கமுக்கமாக காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! நீதிமன்றமே திமுக அரசை கேள்வி கேட்டும் பலனில்லை. இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கும் முயற்சி நடக்கிறது..! சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த மக்கள் போராட்டத்தின் நூறாவது நாளான 2018ம் ஆண்டு மே 22ல் நடந்த அமைதிப் பேரணியில் பேரணியில்  மக்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி 15 பேர்களை கொன்றனர் காவலர்கள். ...