தும்பை எனும் தொல்சிறப்பு மூலிகை ! – 2 தெம்பைத் தருவதாம் தும்பை! அதனால் தான் போருக்குச் செல்லும் மன்னர்கள் தும்பைப் பூ மாலைகளை அணிந்தனர். வெண்மைக்கும், மென்மைக்கும் உதாரணமாகத் திகழ்வது தும்பை பூ! கண்ணுக்கும் மருந்து, காதுக்கும் மருந்து, புண்ணுக்கும் மருந்து! கோடை தாகத்திற்கு விருந்து! மனிதனின் பல நோய்களுக்கு தீர்வு தருகிறது! சென்ற பகுதியில் தமிழர்களின் மரபில் ஊறிய சித்த மருத்துவத்தின் அசைக்க முடியாத தத்துவங்களைப் பார்த்தோம். இனி தொடர்ந்து வாரம் ஒரு மூலிகை என நம்மைச் சுற்றி விளைந்து கிடக்கும் ...
அடடா, இதன் அருமை,பெருமை தெரியாமல் இத்தனை நாள் அலட்சியப்படுத்தி விட்டோமே என நம்மை நினைக்க வைக்கும் தும்பையின் மகத்துவங்கள் ஒன்றா? இரண்டா? சளி, இருமல், தலைவலி, பூச்சிக் கடி தொடங்கி தோல் நோய்கள் வரை துடைத்து எறிந்து விடும் தும்பை, இயற்கை மருத்துவத்தின் சிகரமாகும்! பெண்களின் முத்துப் பற்களைப் பார்க்கும் போது தும்பை பூ தான் கிராமத்து கவிஞனுக்கு நினைவில் வரும்! எம்.ஜி.ஆர் ஒரு படத்தில், ”தும்பை பூ போலே. துளசி செடி போலே பெண்ணைப் பாருங்க, மாப்பிள்ளை இணங்க..” எனப் பாடுவார்! சிவன் ...