ஆடம்பரத்தின் உச்சத்தை வர்ணிப்பதா? ஆரிய முறைப்படி திருமணச் சடங்குகள் சமஸ்கிருத மந்திரங்களில் நடந்ததை சொல்வதா? திராவிட இயக்கம் திசைமாறிப் பயணித்துக் கொண்டிருப்பதற்கு சாட்சியாகத் திகழும் திருமணம் என்பதா? ‘மொத்தத்தில் திராவிட இயக்க சித்தாந்தத்திற்கு எதிர் நிலையில் திருமணம் நடைபெற்றது’ என ஒற்றை வரியில் விளக்கிடவா..? ஒரு நூற்றாண்டுக்குள் எவ்வளவு தலைகீழ் மாற்றங்கள்! திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தி செந்தாமரை திருமணம் தற்போது பெரும் பேசுபடு பொருளாகியுள்ளது. பார்ப்பனர்களைக் கொண்டு சடங்குகள் செய்து, சமஸ்கிருத மந்திரங்கள் ஓத நடத்துவதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ...
















