ராட்சத மணல் கொள்ளைகள் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நடைபெற்றுக் கொண்டுள்ளன! நீர்வளத் துறை அமைச்சர் பொறுப்புக்கு முற்றிலும் பொருந்தாதவராக நீர் வற்றும் வாய்ப்புகளை நாளும், பொழுதும் ஆராய்ந்து, மணல் கொள்ளையில் மலைக்க வைக்கும் சாதனை நிகழ்த்துகிறார் துரைமுருகன்! திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த ஆண்டு அக்டோபரில் புதிதாக 15 மணல்குவாரிகளை ஏற்படுத்தினார் துரைமுருகன். தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 41 மணல் குவாரிகள் செயல்படுகின்றன! 21 மணல் குவாரிகள் லாரிகள் மூலமாகவும், 30 மணல் குவாரிகள் மாட்டு வண்டி மூலமாகவும் மணல் அள்ளப்பட்டு வருகின்றன! ...

திமுக பொதுச் செயலாளராகவுள்ள துரைமுருகனின் செயல்பாடுகள் சமீபகாலமாக கட்சியினர் மத்தியிலும்,பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியையும்,குழப்பத்தையும் உருவாக்கி வருகிறது. திமுக மீது நமக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் இன்றைக்குள்ள திராவிட அரசியல் கட்சிகளில் இன்னும் சில உறுதியான கொள்கையாளர்களை கொண்டுள்ள கட்சியாக திமுக உள்ளது. திமுகவின் பொதுச் செயலாளர் பதவி என்பது சாதரணமானதல்ல. லட்சக்கணக்கான தொண்டர்கள் தடியடிபட்டும்,சிறைப்பட்டும் தங்கள் இன்னுயிர் ஈந்தும் வளர்ந்த கட்சி அது! ஆனால்,இன்று பிழைப்புவாதிகளும்,அடிவருடிகளும் தான் அக்கட்சியின் தலைமை பதவிகளுக்கு வரமுடியும் என்பதை சூசகமாக உணர்த்துவதாகத் தான் துரைமுருகனின் சமீபத்திய பேச்சுகளும், ...