தூத்துக்குடி உப்பளங்கள் என்பவை உலக பிரசித்தி பெற்றவை. உப்பின் ருசி அப்படியானது. ஒரு லட்சம் பேரின் வாழ்வாதாரத்திற்கு காரணமான உப்பளங்களை அழித்துவிட்டு, அங்கு கப்பல் கட்டும் தொழிற்சாலையை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் மோடி- ஸ்டாலின் முன்னெடுப்பால் தூத்துக்குடியில் கொந்தளிப்பு நிலவுகிறது; தென் மாநிலங்கள் அனைத்திற்கும் மட்டுமின்றி, இலங்கை, இந்தோனேசியா, மாலத்தீவு, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் இங்கிருந்து தான் உப்பு விநியோகம் ஆகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் பலன் அடைகின்றனர். போர்ச்சுகீசியர்கள் காலத்தில் உப்பு உற்பத்திக்கு தேவையான தண்ணீர் ...













