ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவில் தூய்மையான நகரங்களுக்கான மதீப்பீடுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து பின் தங்கியே உள்ளது. மற்ற சிலவற்றில் தமிழகம் முன்னேறி உள்ளது ஆனால், உள்ளாட்சி நிர்வாகத்தில் ஏன் இந்த பெரும் பின்னடைவு? பொதுவாக இந்தியா என்றால், மக்கள் நெரிசல் மிகுந்தது. நாற்றமெடுக்கும் சாக்கடைகள், ஒழுங்கமைவற்ற சாலைகள், குப்பைகள் மிக்க தெருக்கள், கழிவு மேலாண்மையில் பின்னடைவு, ஆறுகளின் கரைகளில் பாலீதீன் பைகள் மற்றும் பிளாஷ்டிக்கின் குவியல், பிளாட்பாரங்களை ஆக்கிரமித்த வியாபாரங்கள், பொது வழியை ஆக்கிரமித்து ...