எத்தனை நாட்கள் போராடினாலும் ஏறெடுத்தும் பார்க்காத அணுகுமுறை மாறியுள்ளது. காவல்துறை அடக்குமுறை தவிர்த்து,  அமைச்சர்கள் தேடி வந்து கனிவாக உரையாற்றியது மக்களாட்சியின் மாண்புக்கு சிறப்பு சேர்பதாகும். அதே சமயம் ஒப்பந்த முறை ஒழிப்பிலும், கண்ணியமான ஊதியத்தை உறுதிபடுத்தி பணி நிரந்தரம் செய்வதிலும் தயக்கமா? தடுமாற்றமா? அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்மையா..? மகிழ்ச்சி, இதைத் தான் எளிய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்! ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடந்த 16 ...

அன்னதானப் பிரபு! வாரி வழங்கும் வள்ளல்! அடேங்கப்பா! தூய்மை பணியாளர்கள் மீது தான் என்னே ஒரு கரிசனம்! பல்லாயிரம் தூய்மை தொழிலாளர்களுக்கு தினம் மூன்று வேளை இலவச உணவாம்! சர்வ சத்தியமாக இது இலவச உணவில்லை. இதன் பின்னணியை முழுமையாக பார்த்தால் தான் உண்மை நிலையை உணர முடியும்; எவ்வளவு உருக்கமாக பேசி இருக்கிறார்பாருங்கள், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! ஊரே உறங்கிய பின்பும், ஓய்வு அறியாமல் உழைப்பவர்கள் நீங்கள் தான். உங்களால் தான் சுகாதாரமான சுற்றுச் சூழல் உள்ளது.உங்களது இந்த அர்ப்பணிப்பும் சேவை உணர்வும் ...

தனியாருக்கு தரகு வேலை பார்ப்பதற்காகவா ஆட்சி அதிகாரத்திற்கு வந்தீர்கள்? வாய் திறந்து பேசாத – ஒரு பேச்சுவார்த்தைக்கு தகுதி இல்லாத -முதலமைச்சருக்கு ஆட்சி எதற்கு? அதிகாரம் எதற்கு?  நள்ளிரவுக் கைதுகள், நாலாந்தரத் தந்திரங்கள், இல்லாதோர் வயிற்றில் அடிக்கச் செய்யும் சூழ்ச்சிகள் குறித்த ஒரு அலசல்; உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது! நிச்சயம் இந்த போராட்டம் வரலாற்றில் நிற்கும். தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் இருந்த ஒழுங்கமைவும், கட்டுப்பாடும், இரவு, பகல் எனத் தொடர்ந்து குடும்பத்தை துறந்து அமர்ந்திருந்த பெண்களின் மன உறுதியும் வியப்பில் ஆழ்த்தின. இவர்கள் இயற்கை ...

தமிழகத்தில் ஒப்பந்தக் கூலி, தனியார் மயம், அவுட் சோர்சிங் எப்போது தொடங்கியது. யாரால் வளர்த்தெடுக்கப்பட்டது? ஏழாம் கட்டமாக இன்றைக்கு அமைச்சர்கள் வந்து நடத்திய பேச்சு வார்த்தை ஏன் தோல்வி அடைந்தது..? மற்ற மாநிலங்கள் தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் எவ்வாறெல்லாம் நடந்து கொள்கின்றன? ஒரு அலசல்; சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியை தனியார் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கியதைக்  எதிர்த்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ராயபுரம், திரு.வி.க.நகா்  உள்ளிட்ட நான்கு மண்டலங்களின் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுள்ளனர். இதனால் தண்டையார்பேட்டை, மண்ணடி, ...