எது நம் தேசத் தலைவர்கள் காண விரும்பிய இந்தியா ? அந்த மகா கனவு என்னவென்பதை நாம் அறிந்திருக்கிறோமா? இன்று நாம் கண்டுள்ள வளர்ச்சி என்பது உண்மையான வளர்ச்சியா..? எத்தனை பெரும் வீழ்ச்சியில் நம் சமூகம்..! அரசியல் கட்சிகள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு வருகின்றனவே..? என் நண்பர் ஒருவர் இந்திய தேசிய காங்கிரஸ் லாகூர் மாநாட்டில் 1929ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை புலனத்தில் அனுப்பி வைத்து, ”இதை ஆழ்ந்து படியுங்கள்” என்று வேண்டினார். அது மிகப் பெரிய விரிவான தீர்மானம். ‘இந்தியா ஏன் பூரண ...