தற்போது அரசு ஓய்வூதியம் தருவதில்லை என்பதால் சோர்வடைய வேண்டியதில்லை. நமக்கு நாமே ஓய்வு காலத்தில் பென்ஷன் கிடைக்க ஒரு வழிமுறையை உருவாக்கி கொள்ள முடியும்! அதற்கு என்ன செய்ய வேண்டும்? குறுகிய, நடுத்தர, நீண்ட கால முதலீடு வகைகளில் பெரும்பாலும் அதிகமானோர் முதலீடு செய்வார்கள். இந்த தொகையெல்லாம் நாம் சுறுசுறுப்பாக நன்றாகச் செயல்படும் போது பயன்படும் ஆனால் இதைவிட முக்கியமான முதலீடு ஓய்வுக்கால முதலீடு ஆகும். இவை நாம் செயல்பட முடியாத போது தேவைப்படும். 58 வயது, 60 வயது ஓய்வு என்பதெல்லாம் முடிந்து ...