கரப்பான் பூச்சி இளைஞர் போராட்டத்திற்கான வரவேற்பு தற்செயலானதோ, திடீர் சம்பவமோ, ஒரு வினாத்தாள் கசிவிற்கு வெகுண்டெழுந்த  போராட்டமோ அல்ல. கடந்த 12 ஆண்டுகளாக கல்வித் துறையில், ஆர் எஸ் எஸ் சூழ்ச்சிகளால் உருவான நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி உள்ளிட்ட இந்துத்துவ  தனியார் ஏஜென்ஸிகளின்  சகிக்க இயலாத தகிடுதத்தங்களின் விளைவுகளே; புது தில்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களை பெல்லட் குண்டுகளால் சுட்டும், தடியடி நடத்தியும் சமாளிக்க முடியாமல் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலுக்கு செவி சாய்த்தது மோடி அரசு. இது மாணவர்களுக்கும், கரப்பான்பூச்சி ஜனதாவுக்கு மட்டுமான ...