கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு தேமுதிகவின் ஓட்டு வங்கி என்ன என்பது நிரூபணம் ஆகாத நிலையில்,  எத்தனை டிமாண்டுகள்..? மலைக்க வைக்கும் பேரங்கள்..! அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பாரம்பரியக் கட்சிகளே பிரேமலதாவின் பேர அரசியலைக் கண்டு பிரமிக்கின்றன..; திரிசங்கு நிலையில் திணறித் தவிக்கிறார், பிரேமலதா! அப்படியும் இல்லாமல், இப்படியும் இல்லாமல் இரண்டுங்கெட்டான் நிலைமை! பாஜகவின்  ஐடியாலாஜிக்கு மிகவும் இணக்கமாக உள்ளவர் என்பதால் எப்படியும் தேமுதிக தங்கள் பக்கம் வந்துவிடும் பாஜக நினைத்தது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எம்.ஜி.ஆர் மீது பெருமரியாதை வைத்திருந்தவர் ...