அதிகாலைத் தொடங்கி மாலை வரை கடின உழைப்பு! தேயிலை பறித்து, பறித்து மரத்து போன கைகள்! ரத்தம் உறிஞ்சும் கொடிய அட்டைப் பூச்சிகளின் தொல்லை! ஓய்வற்ற உழைப்பு, அடிமாட்டுச் சம்பளம், இந்த எளிய மக்கள் இன்று அதிரடியாக வெளியேற்றப்படுவதா? காட்டைக் காப்பாற்றுவதாகச் சொல்வது உண்மையா? மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 4,300 அடி உயரத்தில் அமைந்துள்ளது தான் மாபெரும் தேயிலைத் தோட்டமான மாஞ்சோலை எஸ்டேட்டாகும். தென்காசி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து 1929-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி ‘பாம்பே பர்மா டிரேடிங் ...