பணத்தை தருவதிலும், பெறுவதிலும் காட்டப்படும் சாமார்த்தியம் தான் தேர்தலா? இந்த தேர்தலில் விளையாடிய மிகப் பிரமாண்டமான பணம், பிரதான கட்சிகள் ஜனநாயகத்தை எவ்வளவு கீழ்த்தரமாக மதிப்பீடு செய்து அணுகினார்கள் என அப்பட்டமாக தெரிய வந்துவிட்டது. அதே சமயம் சில நம்பிக்கை கீற்றுகளையும் காண முடிந்தது; முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பதை தீர்மானிக்க முடியாத தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தந்தக் கட்சிக்காரர்களும், அவர்களது தீவிர அபிமானிகளும் தங்கள் கட்சி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதை அடித்துச் சொன்னாலும், ...



















