உண்மையில் பாஜக மீது கடும் அதிருப்தி தான்! விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழல், அதிகார மமதை..எல்லாம் பாஜகவை அழுத்துகிறது! ஆனால், காங்கிரஸ் வெற்றியை வென்றெடுக்க போதுமான உழைப்பை தருகிறதா? ஆம் ஆத்மியின் நுழைவு யாரை பலவீனப்படுத்தும்..? இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12 ல் ஒரே கட்டமாக தேர்தல்கள் நடந்துள்ளது. இதனுடன் இணைந்து குஜராத் மாநிலத்திற்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அனைவரும் அறிந்த ரகசியமான “மேலிட விருப்பத்திற்கேற்ப” குஜராத் தேர்தல்கள் இரண்டு கட்டமாக- டிசம்பர்- 1, டிசம்பர்- 5, ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. ...