வாக்கு எண்ணிக்கையை சொல்லுவதில் குளறுபடி! வன்முறையை தூண்டிவிடும் மோடியை கண்டிக்க பயம், எதிர்கட்சிகளை மிரட்டி பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் முயற்சி..என இந்திய வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் ஆணையம், தேறாத ஆணையமாக காட்சியளிக்கிறது. ‘பத்துமுறை கூட பிரதமராவேன்..’ என கதையளக்கும் மோடி..! முதல் நான்கு கட்ட வாக்கு பதிவுகளில் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்த தேர்தல்களின் வாக்காளர்கள் எத்தனை பேர்?, எத்தனை பேர் வாக்கு அளித்தார்கள்? என்ற எண்ணிக்கையை வெளியிடாமல் வாக்கு சதவிகிதத்தை கூட்டியும், மாற்றியும் குளறுபடி அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய மூடு ...