ஒரு நள்ளிரவு நேரத்தில் அதிரடி நியமனம்! எதிர்கட்சித் தலைவரின் எதிர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு.. எல்லாவற்றையும் துச்சமாக மதித்து இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதன் பின்னணி என்ன? தேர்தல் ஆணையர் நியமனத்தில் பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ள பதற்றம், அவசரம் சொல்லும் செய்தி என்ன? நாடே அதிர்ந்துள்ளது. தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதில் உள்ள நெறிமுறைகள் தூக்கி வீசி எறியப்பட்டுள்ளன. நியாயமான தேர்தலை உத்திரவாதப்படுத்தும் ஆளுமை இருந்தால் ஜன நாயகத்தின் அஸ்திவாரம் பலப்படும். சார்பு நிலையில் உள்ளவர்கள் இருந்தால் மக்களுக்கு தேர்தல் ஜன நாயகத்தின் ...