தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 61 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாக காட்டுகிறது, இந்திய தேர்தல் ஆணையம்! பாஜகவிற்கு சற்று செல்வாக்கான தொகுதிகளில் போலி முகவரிகளில், போலி வாக்காளர்கள் லட்சக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது. இவ்வளவு தில்லுமுல்லுகளை ‘தில்’லாக அரங்கேற்றும் தைரியம் எப்படி வந்தது..? ”தமிழ்நாட்டில் பாஜகவின் சித்து வேலைகள் செல்லாது” ”என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் நோட்டாவுக்கு கிடைக்கும் ஓட்டு கூட பாஜகவிற்கு கிடைக்காது.” ”எப்படிப் பார்த்தாலும் பாஜகவால் தமிழ் நாட்டில் ஒருபோதும் காலூன்ற முடியாது..” இந்த மாதிரியான சொற்பிரயோகங்கள் எல்லாவற்றையும் தூக்கி சூறையாடி, தமிழ்நாட்டிலேயே ...