தமிழகத்தில் ஒரு டஜனுக்கு மேற்பட்ட இடங்களில் – காஞ்சிபுரம் பரந்தூர், ஏகனாபுரம் புதுக்கோட்டை வேங்கை வயல், ஈரோடு மூலக்கரை .. போன்றவற்றில் தேர்தல் புறக்கணிப்பை மக்கள் அறிவித்துள்ளனர். திருவண்ணாமலை மேல்மா விவசாயிகளோ திமுக புறக்கணிப்பை மட்டும் அறிவித்துள்ளனர். இதன் பின்னணி என்ன..? இந்த பாசாங்கு ஜனநாயகத்தில் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதற்கு பதிலாக தாங்களும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்; தேர்தல் பிரச்சாரங்கள் ஓயந்து விட்டன! ஆற, அமர யாருக்கு ஓட்டுப் போடுவது என யோசித்துப் பார்த்தால் விரக்தியே விடையாகிறது. சென்ற நாடாளுமன்ற தேர்தலும் சரி, சட்டமன்ற ...