1,500 வருட மரபின் தொடர்ச்சியாக வளர்ந்த உன்னத கலைகளும், அதன் கலைஞர்களும் நிர்கதியாக கைவிடப்பட்டனர். கலை, பண்பாட்டு தொடர்ச்சி அறுபட்டுப் போனது. அதே சமயம் பெண்கள் மீது பல நிகழ்த்தப்பட்ட பாலியல் சுரண்டலுக்கு ஒரு முடிவை காண முயன்றோம். இந்த வரலாற்றை ஆராயும் போது எதையெல்லாம் நாம் இழந்தோம் , அதில் ஒரு குறிப்பிட்ட சமூகம் எப்படியெல்லாம் ஆதாயம் அடைந்தது என்பதையும் பார்க்க வேண்டும்; தேவதாசி கலாச்சாரம் அழிக்கப்பட்டதால் அந்த கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. அந்த உன்னதக் கலையின் தொடர்ச்சி அவர்களிடம் இருந்து அறுபட்டது. ...

யாருக்கான தேவையாக தேவதாசி மரபு உருவாக்கப்பட்டது…? இதற்கு எப்படி புனித பிம்பம் கட்டமைக்கப்பட்டது? இதில் பலனடைந்தவர்கள் யார்? யார்? தமிழ் கலாச்சார செழுமைக்கு தேவதாசி மரபின் பங்களிப்பு எத்தகையது? இது ஏன் வீழ்த்தப்பட்டது?  ஆய்வறிஞர் பொ.வேல்சாமியின் ஒரு அபூர்வமான வரலாற்று அலசல்; தேவதாசி மரபின் தோற்றமானது உலகளாவிய பண்பைக் கொண்டதாகவும்,  மத நிறுவனங்களினூடே தோன்றி வளர்ந்தாகவும் உள்ளது.  இதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் தேவதாசி 6 ஆம் நூற்றாண்டில் பக்தி இலக்கியங்கள் செழித்தோங்கி வளர்ந்த காலத்தில் உருவானதேயாகும்; இத்தகைய கோவில்களில் பணியாற்றிய ...