தமிழர்களுக்கும் ஒற்றுமைக்கும் வெகு தூரம். நம்மை பிரித்து வைத்து விளையாடுவதில் கைதேர்ந்த பாஜகவின் வலையில் திமுக விழுந்து விடக் கூடாது என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும். Fair Delimitation என்பதில் உள்ள ஆபத்துக்களை தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் உணர்ந்து ஒருமித்து ஒரு முடிவுக்கு வர வாய்ப்புள்ளதா? ஓர் அலசல்; தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவை, நல்வாய்ப்பாக்கி அதிக எம்.பி.க்களை கொண்ட தி.மு.க.வின் உதவியுடன் மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற பா.ஜனதா திட்டமிட்டு காய் நகர்த்தி, திமுக தலைவர்களுடன் தொடர்ந்து பேசி ...
தொகுதி மறுவரையறையாம்! மகளிர் மசோதாவாம்! அவரவர் நோக்கத்திற்கு ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்! அந்த உள் நோக்கத்தை உடைத்து பார்த்தால், இவர்கள் உள்ளீடற்ற உலுத்துப் போன பிற்போக்குவாதிகள் என்பதைத் தான் இவர்களின் கடந்த காலமும், நிகழ்காலமும் நமக்கு சொல்கிறது; ஏன் இந்த திடீர் அவசரம்..? 2023 லேயே மகளிர் மசோதா நிறைவேறிவிட்டது. ஆனால், அதை நிறைவேற்ற மறுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு முடித்த பிறகு அமல்படுத்துவோம் என்ற ஆறப் போட்டார்கள். இந்த மூன்று வருஷமாக அந்த இரண்டையும் நிறைவேற்றுவதில் எந்த முனைப்பையும் ...




















