தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு, ஏதோ தமிழகம் சந்திக்கும் பாதிப்பு மட்டுமல்ல, பல மாநிலங்களும் பாதிக்கின்றன! அதற்கான எதிர்ப்பில் எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் அனைத்துமே ஒன்று பட்டு போர் குரல் கொடுக்கும் என்பதை இந்த கூட்டத்தின் வழியே பாஜக தலைமைக்கு பட்டவர்த்தனமாக புரிய வைத்துள்ளார், ஸ்டாலின்! தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ( மார்ச்-22, 2025) சென்னையில் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் தேசிய அளவில் முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகும். இதில் பாதிக்கப்படும் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ‘கூட்டு நடவடிக்கைக் ...