உழைப்பைத் தவிர தருவதற்கு ஏதுமற்ற உழைப்பாளிகள் எப்படியெல்லாம் சக்திக்கு மீறி வேலை வாங்கப்பட்டு உருக்குலைந்தார்கள்! ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டல்கள், ஆபத்தான வேலைகளை செய்து மரணித்த குழந்தைகள்.. என கடந்து வந்த பாதை நெஞ்சை உலுக்குகிறது..! பெற்ற உரிமைகளை இழப்போமா..? இன்றைய இந்தியாவில் மீண்டும் நேரங்காலமற்று தொழிலாளர்களை வேலை வாங்கும் முயற்சிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், உழைப்பாளி வர்க்கம் என்ன செய்வதென்று தவித்துக் கொண்டுள்ளது. வரலாற்றில் பல இழப்புகளை சந்தித்து நாம் பெற்ற உரிமைகளையும், சட்ட பாதுகாப்பையும் தவறவிடப் போகிறோமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ...