சமீபத்திய கிராம சபை கூட்டங்களில் பல நூறு ஊராட்சிகளில், ”எங்கள் கிராம பஞ்சாயத்துகளை வாழவிடுங்கள். அதனை பேரூராட்சியோடோ, நகராட்சியோடோ, மாநகராட்சியோடோ இணைத்து விடாதீர்கள்” என  தீர்மானம் நிறைவேற்றி, மக்கள் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்துகிறார்கள்.! என்ன நடக்கிறது? தமிழ்நாடு அரசு தற்போது அதி வேகமாக கிராம ஊராட்சிகளை அதிரடியாக பேரூராட்சியுடனோ, நகராட்சியுடனோ, மாநகராட்சியுடனோ இணைத்த வண்ணம் உள்ளது. இப்படி கிராமங்களை வலிந்து நகரப்படுத்துவதால் இயற்கை அழிகிறது, விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆகிறது. விவசாயம் சார்ந்த சிறு தொழில்கள் அனைத்தும் அழிந்து மக்கள் நடுத்தெருவில் ...