அதிவேகமெடுக்கும் தொழில் மயம், நகர்மயம்! அதற்காக விழுங்கப்படும் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள்! வீழ்த்தப்படும் விவசாயம், அழிக்கப்படும் நீராதாரங்கள்..! அகதிகளாக்கப்படும் விவசாயிகள்..! முன் எப்போதும் இல்லாத வகையில் அழிவுப் பாதையில் பயணிக்கும் தமிழகம் குறித்த துல்லியமான அதிர்ச்சி ரிப்போர்ட்! திமுக அரசு பதவி ஏற்ற இரண்டரை ஆண்டுகளுக்கு உள்ளாக பரந்தூரில் தொடங்கி பழவேற்காடு, கடலூர், கிருஷ்ணகிரியின் உத்தனப்பள்ளி, நாகமங்களம், அயர்னப்பள்ளி, செய்யாறு மேல்மா, வாசுதேவ நல்லூர், கடைய நல்லூர்  கெலமங்களம்.. என ஒவ்வொரு நாளும் நிலப் பறிப்பு என்பது நாளும், பொழுதுமாக அரங்கேறி வருகிறது. ...