சமீபத்திய RBI அறிவிப்புகள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இத்தனை கெடுபிடிகளை வங்கியில் கடன் பெறும் மக்களுக்கு தருகிறார்கள்…! இந்தக் கெடுபிடிகளால் பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, வங்கியும் தான். ஆனால், இது கந்து வட்டிக்கார்களும், சேட்டுக் கடைகளுக்கும் ஒரு ஜாக்பாட்டாக மாறலாம்; ரிசர்வ் வங்கியின் முதல் அறிவிப்பு வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் வருடம் ஒரு முறை நகைக்கான வட்டியை முழுமையாகச் செலுத்தி கடனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். ஒரே முறையில் அசல் -வட்டி இரண்டும் கட்ட முடியாது நிலை ...