பிரபல நடிகரான ராஜேஷ் அந்தக் காலங்களில் சினிமாவில் மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் பிசினஸிலும் கொடிகட்டி பறந்தவர். அப்போது அவர் மீது ஒரு இன்கம்டாக்ஸ் வழக்கு பதிவானது, அதை செய்தியாக்கியது தினமணி, பதற்றமானார் நடிகர் ராஜேஷ். படையெடுத்தார் பத்திரிகை அலுவலகத்திற்கு! என்ன நடந்தது..? 1996- ஆண்டு வாக்கில் நான் தினமணியில் நிருபராக பணியாற்றிய போதான அனுபவத்தை உங்களோடு பகிர்கிறேன். அன்றைக்கு ‘ஆர்எம்.டி’ (Rm.T) என அனைவராலும் அழைக்கப்படும் இராம.திரு.சம்பந்தம் தினமணியின் எடிட்டர். எப்போதும் சிரித்த முகத்துடன் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். சிறு சிறு தவறுகளைக் கூட ...