வ.உ.சியை வாழ்க்கை துணையாக்கும் நூல்! இடது சமூக அரசியல்,கலை இலக்கிய காலாண்டிதழ் வ.உ.சியை நினைவு கூர்ந்து, சிறப்பிதழ் ஒன்றை வ.உ.சியின் 150 ஆவது பிறந்த நாளுக்கான ஆவண சிறப்பிதழாக நேர்த்தியாகக் கொண்டு வந்துள்ளது. வ.உ.சி குறித்து இது வரை ஏராளமான செய்திகள் வெளி வந்துள்ளது. ஆனால், இந்த இதழை படித்த போது இன்னும், இன்னும் வ.உ..சி பற்றி பேசவும், எழுதவும் நிறைய உள்ளது எனத் தோன்றியது! அவ்வளவு அரிய தகவல்களை தொகுத்து தந்துள்ளனர்! ‘மக்கள் வாழ்வில் வ.உ.சியின் அறியப் படாத வாய்மொழிக் கதைகள்’ என்ற ...