தமிழகத்தில் பல கிராமங்களின் நடந்து கொண்டிருக்கும் பேசப்படாத பிரச்சினையை மிக நேர்மையாக பதிவு செய்துள்ளது நந்தன். ஒரு தலித், ஊராட்சி மன்றத் தலைவராகும் போது அங்கு ஆதிக்க சாதிக்காரர்களின் ரியாக்ஷன் யதார்த்ததில் எவ்வாறு இருக்கிறது என்பதை உள்ளது உள்ளபடியே சொல்லப்பட்டுள்ளது அபாரம்; அச்சு அசலான கிராமத்து வெள்ளந்தி மனிதனான அம்பேத் குமார்( சசிகுமார்) ஊராட்சி மன்றத் தலைவரானாலும், ‘தான் தலைவரில்லை, ‘வெறும் ரப்பர் ஸ்டாம்பு’ தான்’ என அறிய வரும் காட்சிகளில், ஏமாற்றத்தில் நிலைகுலைந்து போகிறார். இந்தக் காட்சிகள் இந்த நாட்டில் ஜனநாயகம் என்பது ...