அமெரிக்காவின் பொதுச் சமூகம் எப்படி விழிப்புணர்வுடன் அரசியல் தலைவர்களை அணுகுகிறது என்பதற்கு இந்த பாலியல் குற்றவாளியும், புரோக்கருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம் அம்பலப்பட்டதே சாட்சியாகும். சுப்பிரமணியசாமியை தடுக்கலாம், அமெரிக்க நீதிமன்றம் அம்பலப்படுத்தி வருகிறதே! டிரம்ப்பே தப்ப முடியவில்லை. மோடி எம்மாத்திரம்? உலகப் பிரச்சித்தி பெற்ற பாலியல் குற்றவாளியாக தற்போது அறியப்படும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2005-ல் முதன்முறையாக கைதாகும் வரை அகில உலக அளவில் நிதியாளராகவே அறியப்பட்டார். பல மிகப் பெரிய நிறுவனங்களுக்கு நிதி திரட்டி தருவதில் சமர்த்தர் என்று பெயர் பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன் ...