31 வருட நெடிய போராட்டத்திற்கு பிறகு இன்று விடுதலை ஆகி உள்ளேன்! இது நீதிக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாகத் தான் இது சாத்தியமானது! எங்கள் 6 பேர் விடுதலைக்கு எத்தனையெத்தனையோ நல்ல உள்ளங்கள் பாடுபட்டன என உணர்ச்சிகரமானார் நளினி. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மே 21, 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இதையடுத்து 26 பேர் கைதாயினர்! இதில் முக்கிய குற்றவாளிகளான தனு, சிவராஜன் உள்ளிட்ட 12 பேர் தற்கொலை செய்து கொண்டனர்! ...