வி.கே.பாண்டியன்! ஒடிசா மாநிலத்தில் இவர் தான் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் டார்கெட்! பாஜகவும், காங்கிரசும் ஒருசேர இவரைத் தாக்குகின்றன! காரணம், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர் இன்று மக்கள் தலைவராக பரிணமித்துள்ளார்! நிழல் முதல்வரா? ஒடிசாவின் மருமகனா? அல்லது வில்லனா? ஒடிசாவில் மட்டுமின்றி, தற்போது அகில இந்திய அளவிலும் பெரும் பேசுபடு பொருள் ஆகியுள்ளார் தமிழரான வி.கே.பாண்டியன். கடந்த கால் நூற்றாண்டாக காலை நான்கு மணிக்கு எழுந்து ஓய்வு ஒழிச்சலின்றி மக்கள் பணியாற்றிய கலெக்டராக, அதிகாரியாக அறியப்பட்ட பாண்டியன் ஒடிசா மக்களின் பாசத்தையும், ...