திமுக ஆட்சி மீதான அதிருப்திகளை பாஜக எதிர்ப்பு வெற்றி கொள்கிறது! எனினும், தென் சென்னை, வட சென்னை இரண்டிலும் திமுக – அதிமுக போட்டி பலமாக உள்ளது. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மூன்று தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் எதிர் கொள்ளும் சோக அனுபவங்கள் சொல்லி மாளாது..! வட சென்னை தொகுதியில் பாஜக சார்பில் பால் கனகராஜ் நிற்கிறார். இவர் பிரபல வழக்கறிஞர். முதலில் திமுக, பிறகு அதிமுக என்று பயணித்து, பிறகு தமிழ் மாநில கட்சி என்ற ஒரு லெட்டர் ...