எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற பாஜக அள்ளி இறைக்கும் பணம் ஆச்சரியமூட்டுகிறது. கன்னியாகுமரியில் கரன்ஸிகள் புரள்கிறதாம்! கோவையில் நூதன பண விநியோகம் நடக்கிறதாம்! தென் சென்னையோ பண மழையில் திணறுகிறதாம்..! நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ 4 கோடி பிடிபட்டுள்ளதன் பின்னணி என்ன..? ஏப்ரல் -6 அன்று இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் தாம்பரத்தில் பறக்கும் படையினரால் சுமார் நான்கு கோடி ரூபாய்  ஏ.சி பெட்டியில் பயணம் செய்த மூன்று பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. ரகசிய தகவலின்  பேரில் தாம்பரம் போலீசாரும், பறக்கும் படை ...