இருதயராஜ், திருப்போரூர், செங்கல்பட்டு பி.ஜே.பி எப்போது மத துவேஷத்தைக் கைவிடும்? கசாப்புக் கடைக்காரருக்கு எப்போது ஜீவகாருண்யம் தோன்றும் எனக் கேட்பது போல உள்ளது. பிழைப்பும்,தொழிலும் இது தான் என்றான ஒருவரை மாற்றுவது ரொம்ப கஷ்டம். சுரேஷ் குமார், கும்பகோணம் தஞ்சாவூர் தமிழக அரசும் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாகத் தோன்றுகிறதே? பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடும் அவசியத்திற்கே இடம் கொடுக்கவில்லை! பத்திரிகை முதலாளிகளே சலுகைகள், விளம்பரப் பணத்திற்கு ஆசைப்பட்டு சாஷ்டாங்கமாக விழுந்து தங்கள் சுதந்திரத்தை அடகு வைத்து விடுகின்றனரே! பாலமணி,சென்னை ஆன்மிகம் , அரசியல் மற்றும் ...