நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப் பழம் வலிமை தரும் பழம். நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை; இந்தப் பழம் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி இவைகளில் இன்னும் இடம் பெறுவதை காணலாம். ”சுட்டப் பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா?” என அந்தக் குமரன் அவ்வைப் பாட்டியை அலை கழித்த புராண ...