அதிக செலவில்லாமல் எளிமையாக படம் எடுக்கிறார்கள்! சாமானிய மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை சமரசமின்றி அலசுகிறார்கள்! மென்மையான காதலை தென்றலாய் வீச விடுகிறார்கள்! கதாபாத்திரங்களை கச்சிதமாக வடிவமைக்கிறார்கள்! மலையாள சினிமாக்கள் மலைக்க வைக்கின்றன! மலையாளத்தில் ஹோம், ஜோ அண்ட் ஜோ, படங்களைத் தொடர்ந்து வெளியாகி இருக்கும் எளிய சினிமா “நா தான் கேஸ் கொடு”.  குஞ்சாக்கா போபன் இணைந்து தயாரித்து கதை நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை ரத்தீஷ் எழுதி இயக்கி இருக்கிறார். ரதீஷ் ஏற்கனவே அண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்ற சினிமாவின் மூலம் கேரள திரையுலகத்திற்கு ...