அக்யூஸ்டுகள் காட்டில் அடை மழை! விடுதலை, விடுதலை, விடுதலை! சித்தம் கலங்க வைத்து, ரத்தம் உறைய வைக்கும் வண்ணம் பிஞ்சு குழந்தைகளையும், இளம் பெண்களையும் கற்பழித்து கொன்றவர்கள் விடுதலை. சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்கள் நினைத்தால், எப்படிப்பட்ட அக்யூஸ்ட்களையும் தப்ப வைக்க முடியும் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. தேசிய தலைநகர் டெல்லியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தரபிரதேசத்தின் நொய்டா அருகே உள்ள 31வது செக்டார் குடிசை பகுதிகளில் இருந்து சின்னஞ்சிறு பெண் குழந்தைகள், இளம் பெண்கள் தொடர்ந்து காணாமல் ...