ஆடாத ஆட்டமா? போடாதா கூத்தா? அனுபவிக்காத சுக போக இன்பங்கள் ஏதேனும் உண்டா…? தன்னையே கடவுள் என்றார்..! கைலாசா நாட்டின் அதிபர் என்றார்…! எத்தகு ஆற்றல்களாயினும் தன்னைத் தானே சுயகட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாத ஆளுமைக்கு இன்றென்ன நிலைமை? ஏனிந்த பரிதாபம்..! எத்தனையெத்தனையோ இன்பங்களை சாமியார் கெட் அப் தந்த சலுகையில் அனுபவித்து திளைத்த நித்தி, பல செய்யக் கூடாத தவறுகளையும் செய்து, பண்ணக் கூடாத பாவங்களையும் சேர்த்தே செய்த வகையில், அதிகார உயர்மட்டத்தில் இருந்த ஆதரவைக் கொண்டு தப்பித்து வந்தார். வினைப் பயன்களுக்கான ...











