இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைத் தளபதிகள் நடத்திய கொலை பாதகங்களை காட்சிப்படுத்துவதிலும், சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து தண்டிப்பதிலும் நல்ல மைலேஜ் செய்துள்ளது. இதே போன்ற ஒரு விசாரணையை இஸ்ரேலின் நெதன்யாகுவும், அமெரிக்க டிரம்பும் எதிர்கொள்வார்களா..? என ஏங்க வைப்பதே இந்தப் படத்தின் வெற்றி; உலகையே வீழ்த்த நினைத்த ஹிட்லர், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் தற்கொலை செய்து கொண்டான். அவனுடைய கொள்கை பரப்பு அமைச்சராக இருந்த கோயபல்சும் தற்கொலை செய்து கொண்டான். உயிரோடு இருந்த, அடுத்த இராணுவ தளபதியான ஹெர்மன் கோரிங், அமெரிக்கப் ...