அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக இந்திய வம்சாவளியின் இஸ்லாமிய இளைஞன் ஜோரான் மம்தானி ஏழைகள், நடுத்தர மக்கள், தொழிலாளிகள், முற்போக்கு ஜனநாயக சக்திகளின் நம்பிக்கை நாயகனாக – டிரம்பின் வெள்ளை ஆதிக்க இனவெறியை எதிர்ப்பவனாக – நியூயார்க் மேயர் தேர்தலில் வென்றுள்ளார். இந்த வெற்றியை குறித்த அலசல்; அமெரிக்காவின் நியூயார்க் மாநகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக நின்ற இந்திய வமிசாவளியை சார்ந்த ஜோரான் மம்தானி மாபெரும் வெற்றி பெற்றது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த ...













