தமிழகப் பள்ளிக் கல்வியின் சவால்கள் : 5 வழக்கமான பாடங்கள்,படிப்புகளுக்கு இடையே ஓவியம், பாடல்,விளையாட்டு, தையல் உள்ளிட்ட கைத்தொழில்கள், தோட்ட பராமரிப்பு, போன்ற வகுப்புகள் வரும் போது மாணவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைகிறார்கள்! இதைத் தான் வாழ்க்கை கல்வி என்பார்கள்! நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி இதைத் தான் ஆதாரக் கல்வி என்றும், அவசியமான செயல்பாடு என்றும் சொல்கிறார்! இந்த ஆனால், தொழில்கல்விக்கான ஆசிரியர்கள் நியமனம், சம்பளம் தொடர்ச்சியான வகுப்புகள் ஆகியவற்றில் தற்போதைய தமிழக அரசுக்கு போதுமான புரிதல் இல்லாத நிலையே உள்ளது. ...